தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் உங்க விஜய் நான் வரேன் என்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தை கடந்த சனிக்கிழமை துவங்கினார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் தமிழக முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று நாகை மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்காக வருகை தந்தார்.
அவருக்கு மாவட்ட எல்லையில் இருந்து மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் அருகே வந்தபோது அவரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான கட்சியினர், ரசிகர்கள் சாலைகளில் இரு பக்கமும் சூழ்ந்து நின்றனர்.
அப்போது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த விஜய் உள்ளே சென்றுவிட்டதால் அவரை பார்க்க முடியாமல் கூடி இருந்த கட்சி தொண்டர்களும் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் அங்கு இருந்த வாலிபர்கள் அந்தப் பகுதியில் இருந்த கடைகள் மேற்கோரை மற்றும் நிர்வாகிகள் வரவேற்புக்காக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் மேல் ஏரி அமர்ந்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை பார்ப்பதற்காக உயிரையும் உயிரையும் பனைய வைத்து ஏறி நின்றனர்.
இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாத என காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் ரசிகர்கள் தொடர்ச்சியாக அத்திமீரும் செயலில் ஈடுபட்ட வருகின்றனர்.
