நடிகர் பொன்னம்பலத்தையும் அவருடைய வில்லத்தனமான நடிப்பையும் பற்றி 90ஸ் கிட்ஸ்களுக்கு நன்றாகவே தெரியும். ரஜினி, கமல், விஜய், அஜித், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஸ்டண்ட்மேன் ஆக இருந்த இவர் பின்னர் நடிப்பில் தீவிரமாக ஈடுபட்டார்.
இப்போது மிகத் தீவிரமான உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகளால் மிகக் கடுமையாக அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனுடன் சிறுநீரகக் கோளாறு இருந்திருக்கிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டதில் இருந்து டயாலிசிஸ் செய்து கொண்டு வருகிறார். கடந்த 4 வருடத்தில் மட்டும் 750 ஊசி அவருக்கு போட்டு இருக்கிறார்களாம். ஒருநாள் விட்டு ஒரு நாள் ஒரே இடத்தில் ஊசி போட வேண்டுமாம்.
உலகத்திலேயே மிக மோசமான தண்டனை என்னவென்றால் அது டயாலிசிஸ் செய்வது தான் என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார். உப்பு உள்ள உணவுகளை, நாக்குக்கு ருசியான உணவுகளை என்னால் சாப்பிட முடியாது. நான் கஷ்டப்படற மாதிரி என் எதிரிகளுக்கு கூட கஷ்டம் வரக்கூடாது என கூறியுள்ளார். நரக வேதனை அனுபவிப்பதாகவும் மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டு வந்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
