Monday, December 29, 2025

திருவாரூரில் விஜய் பரப்புரை: முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

த.வெ.க தலைவர் விஜய் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் முதல் சுற்றுப் பயணமானது கடந்த 13-ஆம் தேதி திருச்சியில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று நாகை மற்றும் திருவாரூரில் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். அதன் காரணமாக திருவாரூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் வரும் வாகனங்கள் கங்களாஞ்சேரி, வடகண்டம், விளமல் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தஞ்சாவூரிலிருந்து நாகை வரும் வாகனங்கள் அம்மையப்பன் வெள்ளகுடி, புலிவலம் வழியாக பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மன்னார்குடியிலிருந்து வரும் வாகனங்கள் வெள்ளக்குடி, புலிவலம், வாழ வாய்க்கால் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related News

Latest News