செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கிய தேர்வு வருகிற 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் வருகிற 26ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், காலாண்டு விடுமுறை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி அரசு பள்ளிகளில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10 நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கவுள்ளது.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால் 6 நாள் மட்டுமே விடுமுறையானது கிடைக்கவுள்ளது. இதனை தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையும் மாணவர்களுக்கு கிடைக்கவுள்ளது.
