Monday, December 29, 2025

நடிகர் விஜய் வீட்டுக்குள் திடீரென புகுந்த வாலிபர்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வீட்டில் நுழைந்து மொட்டை மாடியில் உட்கார்ந்து இருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள் அந்த இளைஞரை பிடித்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண்(24) என்பதும், நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நீலாங்கரை போலீசார் சேர்த்தனர்.

Related News

Latest News