புதுக்கோட்டை அருகே எட்டு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அறந்தாங்கியில் உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்த முத்துக்கனி கறிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவரின் வீட்டில் அருகில் உள்ள எட்டு வயது பெண் குழந்தைக்கு ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு குழந்தையின் நடவடிக்கையை அறிந்த பெற்றோர்கள் என்ன நடந்தது என்று விசாரித்த போது 62 வயது முத்துக்கனி குழந்தையிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் திருமயத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு புகார் அளித்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் குற்றவாளி முத்துக்கனிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.12000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்தார்.
