திருப்பூரில் சாலையின் நடுவில் 8 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 30-வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமி நகர் சாலையில் திடீரென சாலையின் நடுவில் 8 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. பள்ளத்தில் யாரும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக அருகில் இருந்தவர்கள் செயற்கை தடுப்புகளை வைத்தனர்.
மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இந்த திடீர் பள்ளத்தை சீரமைத்து சாலையை தரமான சாலையாக அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
