Monday, December 29, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனுவுடன் வந்தவர் தடுத்து நிறுத்தம்

திருச்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனுவுடன் வந்த விவசாய சங்கத் தலைவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அதவத்தூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி மாவட்ட தமிழக விவசாய சங்கத் தலைவர் சின்னதுரை, கருப்புக்கொடி மற்றும் சங்கக் கொடியுடன் வர முயன்றார்.

அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சின்னதுரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related News

Latest News