வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை எம்.பி. விஜய் வசந்த் நாகர்கோவிலில் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பாக வாக்கு திருட்டுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் டெரிக் சந்திப்பில் தொடங்கியது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. விஜய் வசந்த், மக்களின் வாக்குரிமையை பறித்து ஜனநாயக படுகொலை நடந்த சம்பவம் அம்பலமாகி உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
