இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் காலமாடன் படம். இந்த திரைப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அமீர், லால், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள், அருவி மதன் மற்றும் அனுராக் அரோரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகிறது.முன்னதாக நடித்த தான் நடித்த படங்களில் ஸ்டைலிசான தோற்றத்தில் நடித்திருந்த துருவ் விக்ரம், இந்த படத்தில் தென்மாவட்ட கபடி விளையாட்டு வீரராக களமிறங்கி உள்ளார்.
கடந்த ஒன்றாம் தேதி பைசன் படத்தின் “தீ கொளுத்தி” என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.தற்போது இப்படத்தின் “றெக்க றெக்க” என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜ், அறிவு இந்த பாடலை எழுதியிருக்கிறார்கள்.
இந்த பாடலில் துருவ் விக்ரம் உடற்பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. முதல் பாடலை விட இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், மணத்தி கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கை வரலாறு கதையில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.
