கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிநகர் பகுதியில் வசிக்கும் 23 வயது இளைஞரிடம், “நான் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்” என அறிமுகப்படுத்தி, அரசு நிதியுதவி திட்டத்தில் 10 லட்சம் பெற உதவி செய்து தருவதாக கூறி, 23 ஆயிர்தது 500 ரூபாய் வசூலித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அஞ்செட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், குற்றச்சாட்டில் தொடர்புடையவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பதும், இவர் 2002ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும் இவர் பலரிடம் பணம் மோசடி செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து, இராயக்கோட்டை பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த பிரபுவை காவல்துறையினர் கைது செய்தனர். இதுபோன்ற மோசடிகளில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
