Tuesday, December 30, 2025

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டுக்கொண்ட 36 பேருக்கு திடீர் காய்ச்சல்

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 36 பேருக்கு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அரசு தாய்சேய் நல மையம் இயங்கி வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கர்ப்பிணி பெண்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கர்ப்பிணிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி மற்றும் குழந்தை பெற்றவர்களுக்கு ஊசி போடப்பட்ட நிலையில் அவர்களுக்கு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள் நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு மாற்று மருந்து கொடுத்தனர். சிறிது நேரம் கழித்து 30-க்கும் மேற்பட்டோரின் உடல்நிலை சீரானது. இதில் 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ்
அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் மகப்பேறு சிகிச்சைக்காக வந்திருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பதற்றம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News