இந்தியா – அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையில் கிரீன் சிக்னல்! எடுக்கப்பட்ட முக்கிய முடிவு! வெளியான புதிய தகவல்!

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கிடையில் இந்த பேச்சுவார்த்தை 5 கட்டங்களாக நடைபெற திட்டமிடப்பட்டது.

அந்த நேரத்தில், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரியை விதித்தது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்ற காரணத்தால், அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இதனால் பேச்சுவார்த்தை முடங்கியது.

பின்னர், ‘வர்த்தக தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ என்று டிரம்ப் தெரிவித்தார். அதன்படி, அமெரிக்க பிரதிநிதி பிரன்டன் லின்ச் தலைமையிலான குழு இந்தியா வந்தது. அதன்பின், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக அதிகாரிகளுடன் நீண்ட நேர பேச்சுவார்த்தை நடந்தது. ஏறத்தாழ 7 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதும், இரு தரப்புக்கும் இழப்பு ஏற்படாமல் சுமூகமாக ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும் என்பதும் விவாதிக்கப்பட்டது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் இதுகுறித்து தகவல் வெளியிட்டது. மேலும், அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் மூலம் முழுமையான தீர்வு காணப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கிடையேயான உறவு சுமூகமாக தொடரும் என்ற நம்பிக்கை உதயமாகியுள்ளது.

Related News

Latest News