ஓசூரில் ஏடிஎம் மிஷினில் பசை தடவி நூதன முறையில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் ஏடிஎம் மிஷின் ஒன்று பழுதானதால், அதனை சரிசெய்யும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, இரண்டு இளைஞர்கள் ஏடிஎம் மிஷினில் நூதன முறையில் பணம் கொள்ளையடிப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த வீடியோ பதிவை ஏடிஎம் பராமரிப்பு செய்பவர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தாஹிர், ஹாசம், லாரி ஓட்டுனர் முகமது சாத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
