தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் சூர்யா,இவர், ரெட்ரோ திரைப்படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும். இந்த நிலையில் இந்த திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும்,சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி என பலரும் நடித்துள்ளனர்.இந்த திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இத சூழலில், படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளி வரலாம என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது படத்தின் ரீ -ரெகார்டிங் பணிகளை சாய் அபயங்கர் தொடங்கியுள்ளார். இதனை அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
