விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால்.., நயினார் நாகேந்திரன் விமர்சனம்

விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் ஒரே நாடு ஒரே தேர்தலின் நன்மைகள் தெரிந்திருக்கும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

மதுரை அண்ணா நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தனது கருத்து என்று கூறினார்.

அதிமுகவில் ஜனநாயகம் இருப்பதால்தான் அக்கட்சியின் தலைவர்கள் அமித்ஷாவை சந்தித்து வருகிறார்கள் என்றும் கூறினார். விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் ஒரே நாடு ஒரே தேர்தலின் நன்மைகள் தெரிந்திருக்கும் என்றும் கூறினார்.

Related News

Latest News