தங்கம் விலையில் அதிரடி மாற்றம், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,210-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 81,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ,82,240க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,280க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.144-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related News

Latest News