காலாகாலமாக “பாதுகாப்பான முதலீடு” என்றால் மக்கள் தங்கத்தையே நினைத்தார்கள். திருமண நகைகள் முதல் முதலீட்டு பட்டியல் வரை தங்கம் முக்கிய பங்கையே வகித்தது. ஆனால் இன்றைய சூழலில் தங்கத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைப்பது புத்திசாலித்தனம் அல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
காரணம் என்னவென்றால், தங்கத்தின் விலை தற்போது நிலை தடுமாறி வருகிறது. உலக பொருளாதார மாற்றங்கள், டாலர் வலிமை, வட்டி விகித உயர்வு போன்ற காரணங்களால் தங்கத்துக்கு மதிப்பு இருக்காது என ஒரு தரப்பினரால் கூறப்படுகிறது. இதனால் பல முதலீட்டாளர்கள் தங்கள் பார்வையை மற்ற சிலவற்றின் மீது திருப்ப ஆரம்பித்துள்ளனர்.
அதில் முதன்மையானது வெள்ளி. வெள்ளி இன்று நகை செய்ய பயன்படும் ஒரு உலோகமாக மட்டும் இல்லாமல், தொழில்துறைகளின் தேவைக்கேற்ப அதிகம் தேவைப்படும் உலோகமாக மாறியுள்ளது. சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவற்றில் வெள்ளியின் தேவை அதிகமாக உள்ளது. எதிர்காலத்தில் பசுமை ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிகரிக்கும் போது வெள்ளி மீதான தேவை இன்னும் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இந்த நிலைமையை பார்த்த பல நிபுணர்கள், “தங்கத்தின் கதை மெதுவாக முடிவிற்கு வருகிறது. இனி வெள்ளியே அடுத்த முக்கிய சொத்து” என்கிறார்கள். எனவே முதலீட்டாளர்கள் தங்கள் தொகுப்பில் வெள்ளியையும் சேர்ப்பது புத்திசாலித்தனமான முடிவாக கருதப்படுகிறது. மொத்தத்தில், தங்கத்தை மட்டும் நம்பி இல்லாமல், எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வெள்ளி போன்ற புதிய வாய்ப்புகளை கவனிக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதை தங்கம் அல்லது வெள்ளிக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
