குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டெடுப்போம் என அண்ணா பிறந்தநாளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், குடும்ப பின்புலமற்ற சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியலின் ஈடு இணையற்ற தலைமகன் பேரறிஞர் அண்ணா என புகழாரம் சூட்டியுள்ளார். சாமானிய மக்களுக்கான அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை நிறுவுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா, அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என கூறியுள்ளார். அண்ணாவை பெயரில் மட்டும் அல்ல, கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக பெருமையோடு ஏந்தி நிற்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
