அண்ணா பிறந்தநாளையொட்டி, ஆதிக்க சக்திகளின் முன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுகொண்டார்.
பேரறிஞர் அண்ணாவிம் 117வது பிறந்தநாளை ஒட்டி, திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைதொடர்ந்து பேசிய அவர், ஆதிக்க சக்திகளின் முன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்றும் தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராடுவேன் எனவும் உறுதிமொழி ஏற்று கொண்டார்.
தமிழ்நாட்டின் மண்- மொழி- மானத்த எந்நாளும் காப்பேன் என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் மொழி, பண்பாட்டுக்கு எதிரான எந்தவொரு பாகுபாட்டையும், எதிர்ப்பு போராட உறுதி ஏற்போம் என தெரிவித்தார். நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்க தேவைக்காக நிதிக்காக போராடுவேன் எனவும் உறுதிமொழி ஏற்றார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, ஆ. ராசா, சேகர் பாபு, டி.ஆர்.பாலு, டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.
