எலும்பு முறிவுக்கு மூன்றே நிமிடத்தில் தீர்வு!! என்ன தெரியுமா?

பொதுவாக விபத்திலேயோ அல்லது விளையாட்டும் ஏற்படும் காயங்களாலோ அதீத வலி ஏற்படுகிறது. வலி, வீக்கம், மென்மை, மற்றும் சிதைவு ஆகியவை எலும்பு முறிவின் பொதுவான அறிகுறிகளாக கருதிகின்றனர். சிகிச்சையில், எலும்பு இணைப்புகளை அசைவில்லாமல் வைக்க உலோக கம்பிகள்/தட்டுகளைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை மூலம் நிலை நிறுகிக்கின்றனர்.இது சாதாரணமான எலும்பு முறிவுக்கான சிகிச்சையாகும்.

ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால்,அதை மீண்டும் எலும்புகள் சரி ஆவதற்கு சில மாதங்கள் வரை ஆகிறது. இதனால், பாதிக்கப்பட்டவரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

இனிமேல் இந்த நிலை இல்லை.. எப்படினு கேட்கிறீங்களா?

அதாவது எலும்பு முறிவு ஏற்பட்டால், இனி அறுவை சிகிச்சைக்கு பதில், 3 நிமிடத்தில் அதனை ஒட்டி சரி செய்யும் பசையை சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.அதாவது, ‘Bone-02’ என அழைக்கப்படும் இந்த பசை, இரத்தம் இருந்தால் கூட, 3 நிமிடங்களில் இரு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டிவிடும் என்றும், 150 பேருக்கு நடந்த சோதனை வெற்றி அடைந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எலும்பு குணமடையும் போது இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்படும் என்பதால் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.வரும் காலங்களில் தான் இந்த பசை எவ்வாறு இருக்கப்போகிறது என்பது பற்றி தெரிய வரும்..

Related News

Latest News