Wednesday, February 18, 2026

“எத்தனையோ வேல எப்பவுமே வேல…” தியேட்டரில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்த பெண்!!

துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் ‘லோகா’ திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த திரைப்படத்தில், பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.இந்த திரைப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் லோகா’ திரைப்படத்தின் பார்த்துக்கொண்டே திரையரங்கிற்குள் அமர்ந்து மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.2 மணி நேரம் கூட வேலைக்கு ஓய்வு கொடுக்க முடியாதா? Work-Life balance கேள்விக்குள்ளாகியுள்ளது என்று சமூகவலைதங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

Related News

Latest News