தடையை மீறி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை ஒட்டிபல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வடகிழக்கு பருவமழை காலத்தில் தடையை மீறி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொது இடங்கள், சாலையோரங்களில் தடையை மீறி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
