Monday, December 29, 2025

உச்சநீதிமன்ற வளாகத்தில் புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுக்க தடை

உச்சநீதிமன்ற வளாகத்தில் புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் பாதுகாப்பு குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது :

உச்ச நீதிமன்றத்தில் ஊடகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான், ஊடகங்களை சேர்ந்தவர்கள் பேட்டி எடுப்பது நேரலை செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை தவிர உயர் பாதுகாப்பு வளையப்பகுதிகளுக்குள் புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோக்களை பதிவு செய்யவும் முழுமையாக தடை விதிக்கப்படுகிறது என்றும் கேமரா, செல்ஃபி ஸ்டிக் போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களை எடுத்து வரவும் தடை விதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய கட்டுப்பாடுகளை மீறினால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் உயர்பாதுகாப்பு பகுதிகளுக்குள் வர ஒரு மாத காலம் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களில் உச்சநீதிமன்றத்தின் ஊழியர்கள் யாரேனும் மேற்கொண்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News