Saturday, September 13, 2025

வைரலாகும் “சிக்கன் ப்ராத்” நல்லதா..? கெட்டதா..? மருத்துவர் விளக்கம்.!

சமீப நாட்களாக சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவரும் சிக்கன் பிராத் பலரும் பார்த்திருக்கலாம். இதை பிரபலங்கள் தொடங்கி சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் வரை பலரும் ஆரோக்கியமான பானம் என சொல்லி வருகின்றனர். ஆனால் இது முற்றிலும் ஆபத்து என்கிறார் பொதுநல மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி.

சிக்கன் பிராத் என்ன என்று தெரியுமா? தற்போது பார்க்கலாம்.

சிக்கன் பிராத் என்பது கோழிக்காலில் செய்யும் ஒரு விதமான சூப் என்று அழைக்கலாம். கோழிக்கால்களை நன்கு சுத்தம் செய்து அதோடு மிளகு ,சீரகம், இஞ்சி, பட்டை, கிராம்பு, பூண்டு என பல வகையான மசாலா பொருட்களை சேர்த்து குக்கரில் மிதமான தீயில் ஒரு மணி நேரம் வேக வைத்து அந்த தண்ணீரை வடிகட்டுவார்கள்.இந்த வடி கட்டும் தண்ணீரை காற்று புகாத டப்பாவில் அடைத்து ஃபிரிட்ஜில் வைப்பது. இந்த மாதிரியான வைத்த தண்ணீரை மறுநாள் திறந்து பார்த்தால் ஜெல்லி போல் இருக்கும். இதனை தினமும் காலை டீக்கு பதில் இதை 1 அல்லது 2 ஸ்பூன் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து உப்பு போட்டு குடிக்கிறார்கள். இதைத்தான் சிக்கன் பிராத் என்கிறார்கள். இந்த பிராத்தை சிக்கன் மட்டுமல்ல, மட்டனிலும் செய்கிறார்கள்.

அதாவது, இந்த பிராத் சருமத்தில் உள்ள கொலாஜின்கள் புத்துயிர் பெறுவதாகவும், புதிய செல்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று வீடியோக்களில் சொல்லி வருகிறார்கள். ஆனால், இந்த முறை முற்றிலும் ஆபத்தான முறை என்கிறார் மருத்துவர்.

இதை என்ன ஆபத்து இருப்பதைப் பற்றி பார்க்கலாம்..?

சிக்கன் அல்லது மட்டனை இந்த மாதிரியான பிராத் செய்து சாப்பிடுவதால் உறை நிலையில் வளரக்கூடிய பாக்டீரியாக்களின் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கிறார் மருத்துவர்.அதாவது இதுபோன்ற பாக்டீரியாக்களுக்கென என தனிக்குழுவே உள்ளது. அதிலும் இதுபோன்ற பிராத் செய்யப்பட்ட உணவில் அவை வளருமாம்.

உறைய வைத்தால் அவற்றின் வளர்ச்சி கட்டுக்கடங்காமல் இருக்கும் என்கிறார். அந்த வகையில் இதில் லிஸ்டெரியா மோனோசைடோஜீன்ஸ் {listeria monocytogenes }காஃபிலோபாக்டெர் ஜிஜுனி {Camphylobacter Jejuni }சால்மொனெல்லா {Salmonella } ஆகிய இந்த 3 பாக்டீரியாக்களும் உறை நிலையில் நன்கு வளரக்கூடியவை என்கின்றார்.அதிலும் பிராத்தில் வளரக்கூடிய பிரத்யேகமான ஈகோலை பாக்டீரியாக்களும் உள்ளன. இந்த பாக்டீரியா குழுக்களில் எவையேனும் ஒன்று வயிற்றுக்குள் வந்துவிட்டாலும் நிக்காமல் வயிற்றுப்போக்கும், மற்ற உபாதைகளும் உண்டாகும் என எச்சரிக்கிறார்.

குறிப்பாக லிஸ்டெரியா மோனோசைடோஜீன்ஸ் இந்த கிருமிக்கு Refrigerator Killer என்கிற மற்றொரு பெயரும் உண்டு. ஏனெனில் இது மைனஸ் டிகிரியில் மட்டுமே உயிர்வாழக்கூடிய பாக்டீரியாவாகும்.இதனை வெளியே எடுத்து சூடு படுத்தும்போது அந்த பாக்டீரியாக்கள் அழிந்துவிடாதா என்கிற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால் இதனை சூடுபடுத்தி அழிக்க வேண்டுமெனில் உட்சபட்ச வெப்பநிலையில் சூடாக்க வேண்டும். அதாவது 70°celsius தான் சூடுபடுத்த வேண்டும். ஆனால் அதை வீட்டில் செய்ய முடியாது என்கிறார் மருத்துவர்.

இந்த பிராத் செய்யும் முறையில் சேர்க்கப்படும் பொருட்களோ, அதை மிதமான சூட்டில் வேக வைப்பதோ கூட பிரச்சனையில்லை. இது எல்லாம் சரிதான். ஆனால் அதை டப்பாவில் அடைத்து ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை எடுத்து எடுத்து சாப்பிடுவது தான் ஆபத்து என்கிறார். இந்த மாதிரியான வடிகட்டும் சூப்பை அப்போதே சூடாக குடிப்பதுதான் மிக சிறந்தது என்கிறார். மேலும் இந்த மாதிரியான சூப் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது, செரிமானம் நன்றாக இருக்கும். உடல் ஆற்றல் அதிகரிக்கும். இன்னும் பல சத்துக்களை பெறலாம் என்கிறார். எனவே சூப் குடிப்பதாக இருந்தால் உடனே செய்து அப்போதே குடிக்க வேண்டும் என்கின்றார் என்கிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News