Friday, September 12, 2025

விபத்து காப்பீடு முதல் ஓய்வூதியம் வரை! E-Shram Card-ன் அட்டகாசமான சலுகைகள்! ஒரே பதிவு, பல நன்மைகள்!

இந்தியாவில் பல கோடி தொழிலாளர்கள் அமைப்புசாரா துறையில் அதாவது Unorganised Sector-ல் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஓய்வூதியம், காப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்புகள் இல்லை. இந்த பிரச்சினையை சரி செய்யவே மத்திய அரசு E-Shram Card திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

E-Shram Card என்பது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வழங்கும் தனித்துவ அடையாள அட்டை. இது 12 இலக்க யூனிக் UAN எண்ணுடன் கூடிய அட்டை. அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களின் தரவுகளை ஒரே இடத்தில் பதிவு செய்வதே இதன் நோக்கம்.

இதில் யார் எல்லாம் பதிவு செய்யலாம் என்பதை பார்க்கலாம். வயது 16 முதல் 59 வரை உள்ளவர்கள். விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டு வேலைக்காரர்கள், கைத்தொழில் மற்றும் சிறு தொழிலாளர்கள் என அமைப்புசாரா துறையில் உள்ள அனைவரும் இதில் விண்ணப்பிக்கலாம். அதே நேரத்தில் EPFO, ESIC, NPS போன்ற திட்டங்களில் ஏற்கனவே உறுப்பினராக இல்லாதவர்கள் பயன்பெற முடியும்.

இந்த திட்டத்தில் 2 லட்சம் வரை விபத்து காப்பீடு, அரசு அறிவிக்கும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை, முதியோர் ஓய்வூதியம், மருத்துவ வசதி, குழந்தைகளுக்கான கல்வி உதவி போன்ற சமூகப் பாதுகாப்புகள் கிடைக்கும். மேலும் அவசர நிலைகளில் நேரடி நிதி உதவி பெறும் வாய்ப்பு உண்டு.

இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க திரையில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்யலாம். ஆதார், வங்கி கணக்கு விவரங்கள், மொபைல் எண் இருந்தால் போதுமானது. பதிவு செய்தவுடன், தொழிலாளருக்கு E-Shram Card கிடைக்கும்.

E-Shram Card என்பது அமைப்புசாரா துறையில் உழைக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசம். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், நலத் திட்டங்களை எளிதில் பெறவும் இந்த அட்டை மிகப் பெரும் பங்காற்றுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News