‘Nano Banana’ என்பது Google Gemini கருவியில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு புதிய Image Editing மற்றும் பட உருவாக்கத்தின் அதாவது image generation & editing க்கான திறன் மிகுந்த மாடல். இது சாதாரண text prompts மற்றும் புகைப்படங்கள் இரண்டையும் பயன்படுத்தி ஒரு சில நொடிகளில் எளிதில் அழகான, 3D மாதிரியான படங்களை உருவாக்கிக்கொள்ள உதவுகிறது.
இதன் முக்கிய அம்சங்களை பார்க்கலாம். பன்முகத் திருத்தம் அதாவது அணிந்துள்ள உடையை மாற்றுத்தருவது, background மாற்றுத்தருவது, சில பொருட்களோடு இசைத்தல் என்று சொல்லப்படும் photo blending போன்றவற்றை செய்யலாம். அடுத்து ஒரே நபர், செல்லப்பிராணியுடன் இருப்பது அல்லது இல்லாத பொருளை சேர்ப்பது போன்றவற்றை ஒரே புகைப்படத்தில் Edit செய்துகொள்ளலாம். மட்டுமல்லாமல் face features, உடல் அமைப்பு போன்றவற்றையும் மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும் இதன் க்வாலிட்டி மற்றும் வேகமான தயாரிப்பு ஆச்சரியமாக உள்ளது. நம்ப முடியாத சில தரமான realistic effects ஐ சில விநாடிகளில் பெற்றுக்கொள்ள முடியும். சுருக்கமான கட்டளை அதாவது prompts மூலம் நீங்களும் ஒரு படத்தைத் உருவாக்கலாம். குறிப்பாக எந்த அளவு, 3D போன்ற விளக்கமான prompt களை இதில் பயன்படுத்தி படங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.
AI-யால் உருவாக்கப்பட்ட படங்களில் watermark மற்றும் ‘SynthID’ எனும் டிஜிட்டல் அடையாளம் இருக்கும். அதனால் உண்மையான புகைப்படத்துக்கும் AI-யால் உருவாக்கப்பட்டதுக்குமான மாறுபாடுகளை கண்டறிய உதவும். ‘Nano Banana’ அம்சம், AI உலகில் படைப்பாற்றலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே புதிய வாசலை திறக்கிறது. சாதாரண text prompt-கள் மூலமே சில விநாடிகளில் கண்களை கவரும் படங்களை உருவாக்கும் இந்த மாடல், எதிர்காலத்தில் Image Editing உலகையே மாற்றப்போகிறது. அதே நேரத்தில் watermark மற்றும் SynthID பாதுகாப்புகள், நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய அம்சமாக இருக்கும்.