விழுப்புரத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால், ஆத்திரமடைந்த மாணவர்கள் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர்.
விழுப்புரத்தில் இருந்து திருவெண்ணைநல்லூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. வழுதரெட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, அரசு பள்ளி மாணவர்கள் கைகாட்டி பேருந்தை நிறுத்த முற்பட்டுள்ளனர். அப்போது அரசு பேருந்தில் ஏற்கனவே அதிக மாணவர்கள் தொங்கியபடி வந்ததால் நிற்காமல், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து தப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.