மகாராஷ்டிர ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவராகத் தேர்வானதால், சி.பி. ராதாகிருஷ்ணன் தனது மகாராஷ்டிர ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
