Monday, December 29, 2025

ஐஸ்வர்யா ராய் புகைப்படம் தொடர்பான வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ஐஸ்வர்யா ராயின் பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்வதாகவும், ஏஐ-யால் உருவாக்கப்பட்ட அவரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பரப்பப்படுவதாகவும் இதுதொடர்பாக இணையதளங்கள் அதிகளவில் பெருகி இருப்பதாகவும் நடிகை ஐஸ்வர்யா ராய் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், ஆன்லைன் தளங்கள் வணிக ஆதாயத்திற்காக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் பெயர், படங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

Latest News