80 வயதில் பிளஸ் 2 தேர்வு.. முதியவர் அசத்தல்..

படிக்க வயது ஒரு தடையல்லஎன்பது அனைவரும் அறிந்தது ஒன்றுதான்.இதனை பல நேரங்களில் பல சூழல்களில் பலர் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில், இங்கே முதியவர் 80வது வயதில், பிளஸ் 2க்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.

கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த பி.டி.கோபிதாஸ் என்ற முதியவர் 80வது வயதில், பிளஸ் 2க்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.

அதாவது, 1957ல் 5ம் வகுப்பு முடித்த கோபிதாஸ் அதன் பிறகு பள்ளிக்குச் செல்லவில்லையாம். பின்னர் பல ஆண்டுகளுக்கு முன்பு கேரளா அரசின் கல்வியறிவு திட்டம் குறித்து அறிந்து 7, 10ம் வகுப்புகளுக்கான படிப்பில் கோபிதாஸ் தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில், பிளஸ் 2க்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றார். இது குறித்து பேசிய கோபிதாஸ், “பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியிருந்தாலும் நான் தினமும் எதையாவது படித்துக்கொண்டு தான் இருப்பேன். அதனால் மீண்டும் பள்ளி பாடப்புத்தகங்களை படிப்பது எனக்கு சிரமமாக இருக்கவில்லை. ஒருநாளைக்கு 2 மணிநேரம் படிப்பேன். என்னுடைய பேர குழந்தைகளுடன் அமர்ந்து பாடம் படிப்பேன்.

மேலும், ஆங்கிலம் மட்டும் தான் எனக்கு சற்று கடினமாக இருந்தது. நான் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது என் அம்மாவின் கனவு. அதை நிறைவேற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய ஆசிரியர்கள் உட்பட பலரும் என்னை தொடர்ந்து படிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதனால் சட்டம் படித்து வழக்கறிஞராக விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கோபிதாஸுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், தற்போது அவர் தனது இளைய மகள் மற்றும் அவர்களது இரண்டு பேராகுலந்திகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News