Thursday, September 11, 2025

ஓசியில் டீ கேட்டு, கத்தியை காட்டி மிரட்டிய போதை ஆசாமி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கூத்தாண்ட குப்பம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர், சென்னை பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டீ கடை ஒன்று வைத்துள்ளார். இந்த கடாயில் இம்தியாஸ் என்பவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஐந்து பேர் மது போதையில் டீக்கடைக்கு வந்து இம்தியாஸிடம் ஓசியில் டீ கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது பணம் கொடுத்தால் மட்டுமே டீ தருவேன் என இம்தியாஸ் கூறியதன் காரணமாக ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த பட்டக்கத்தியை எடுத்து இம்தியாஸை தாக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

இது குறித்து நாட்றம்பள்ளி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர் இதனால் பயந்து போன மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் மேலும் இருசக்கர வாகனம் மற்றும் பட்டா கத்தியை அங்கே விட்டு சென்றனர்.

விசாரணையில் மிரட்டியவரின் பெயர் குணா என்பதும் அவருடைய இருசக்கர வாகனத்தில் கில்லர் குணா எனவும் எழுதப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News