Thursday, September 11, 2025

குடியரசுத் துணைத் தலைவரின் சம்பளம் எவ்வளவு?

குடியரசுத் துணைத் தலைவர் பதவி நாட்டின் இரண்டாம் பெரிய அரசியலமைப்புப் பதவி ஆகும். அவருக்கு நிரந்தரமாக ஊதியம் வழங்கப்படாவிட்டாலும், பல சலுகைகள் மூலம் மாதம் சுமார் ரூ.4 லட்சம் வரம்பில் வசதிகள் கிடைக்கின்றன.

குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருப்பவர், குடியரசுத் தலைவரின் பதவியை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டால், குடியரசுத் தலைவருக்கான ஊதியமும் வழங்கப்படும். மேலும், அவர்கள் அரசு சார்பில் ஒரு மிகப்பெரிய பங்களா, மருத்துவ சேவைகள், ரயில் மற்றும் விமான பயணங்களுக்கான கட்டண வசதிகள், செல்போன் மற்றும் வயர் இணைப்பு போனுக்கான கட்டணங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் போன்ற பல வசதிகளும் வழங்கப்படும்.

குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு , அவர்கள் மாதம் ரூ.2 லட்சம் பென்ஷன் பெறுவர். மேலும், கூடுதல் செயலர், தனி உதவியாளர், டாக்டர், நர்ஸ், 4 உதவியாளர்கள் போன்ற பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News