விழுப்புரம் நகரபகுதியான அண்ணா நகர் பகுதியில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் லியோ சார்லஸ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர் இருக்கைக்கு அடியில் தனி அறை அமைத்து அதில் மறைத்து புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விழுப்புரத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சார்ந்த சபாபதி என்பவரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 400 மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் இதுபோன்று புதுச்சேரியில் இருந்து பேருந்துகளிலும் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்தோ நான்கு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்தோ கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.