சென்னை முகப்பேர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஜெ.ஜெ.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், முகப்பேர் கிழக்கு நக்கீரன் சாலையில் சந்தேகத்திற்கிடமாக திரிந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவர்களின் பையை சோதனை செய்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முகப்பேரை சேர்ந்த அனிஷ் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வீரியம் அதிகம் கொண்ட 25 கிராம் OG கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.