சமூக வலைத்தளங்களில் டிஜிட்டல் வன்முறையால் 85% பெண்கள் பாதிப்படைவதாக சமீபத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பொருளாதார புலனாய்வுப் பிரிவு நடத்திய ஆராய்ச்சியில், 85% பெண்கள் சமூக வலைத்தளங்களில் மற்றும் ஆன்லைனில் வன்முறையை எதிர்கொண்டு வருவதாக கூறியுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் படி, கோவிட் தொற்றுக்குப் பிறகு பெண்களை நோக்கிய சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
ஆன்லைனில் பெண்கள் மீது துன்புறுத்தல், வெறுப்புச் சொற்கள், புகைப்படங்களை தவறாக பயன்படுத்துதல், மிரட்டல், தொடர்ச்சியாக தொந்தரவு செய்தல், ஆபாசமான உள்ளடக்கம் அனுப்புதல் போன்றவை டிஜிட்டல் வன்முறையின் பகுதியாகும். இது அவர்களது மனநலனையும் மிகத் தீவிரமாக பாதிக்கிறது என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் புகார் அளித்தால், சைபர் கிரைம் சட்டம் மூலம் அவர்களை டிஜிட்டல் வன்முறையில் இருந்து பாதுகாக்க முடியும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.