RBI, வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், ரொக்க இருப்பு விகிதத்தில் அதாவது Cash Reserve Ratio என்று சொல்லப்படும் CRR-ஐ 25-bps குறைக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்த நான்கு கட்ட குறைப்புகளில் முதல் கட்டம் இன்று அதாவது ஆகஸ்ட் 6ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இது பொதுமக்களுக்கு என்ன நன்மை தரும் என்பதை பார்க்கலாம்.
CRR குறைவதால், வங்கிகள் RBI-யிடம் வைக்க வேண்டிய தொகை குறையும். இதனால் அதிக நிதி வங்கிகளிடம் இருக்கும். மேலும், வங்கிகள் புதிய கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் பொதுமக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் பாதை உருவாகும்.
அடுத்ததாக வங்கிகள் கூடுதல் பணத்தை கடனாக வழங்க தயாராக இருப்பதால், வட்டி விகிதங்கள் படிப்படியாக குறைய வாய்ப்பு அதிகம். வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக் கடன் போன்றவற்றில் EMI சுமை குறையும்.
RBI, வட்டி விகிதம் அதாவது Repo Rate 0.50% குறைத்ததோடு, வங்கிகள் RBI-யிடம் வைத்திருக்க வேண்டிய தொகை அதாவது CRR-ரையையும் எதிர்பார்த்ததை விட அதிகமாக குறைத்துள்ளது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு முன்கூட்டியே பெரிய ஊக்கம் கொடுக்க முயற்சிக்கிறது. இதை ‘Frontloading’ என்று கூறுகிறார்கள்.
இந்த CRR குறைப்பு, பொதுமக்களுக்கு குறைந்த வட்டி, குறைந்த EMI என நேரடி நன்மை தருவதோடு, பொருளாதாரத்துக்கும் புதிய உயிரோட்டம் அளிக்கும். இதனால் இந்த நடவடிக்கை மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.