சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, தனது 4 சவரன் நகைகள் திருடப்பட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு திமுக. ஊராட்சி மன்ற தலைவர் பாரதி என்பவர் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.