Saturday, September 6, 2025

ரூ.80 ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே அதிரடியாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.9,865-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,005-க்கும் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News