செப்டம்பர் 22ஆம் தேதி முதலே பெரிய அளவிலான ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தத்திற்கு தயாராகி வருகிறது. ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 5, 18 மற்றும் 40 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களின் விலை குறைய போகிறது.
இந்த முறையும் பெட்ரோல் ,டீசல் போன்ற எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசிக்கவில்லை. இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்துள்ள அவர், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து இந்த முறை தெரிந்தே தான் ஜிஎஸ்டி கவுன்சில் விவாதமே நடத்தவில்லை என கூறியுள்ளார். சட்டரீதியாக பெட்ரோல் ,டீசல் போன்ற எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆனால் இந்த முடிவை எடுக்க வேண்டியது மாநில அரசுகள் தான் என விளக்கம் தந்திருக்கிறார்.
பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்பின் கீழ் வந்தால் மாநிலங்களுக்கு கிடைக்கக்கூடிய வாட் வரி கிடைக்காது மத்திய அரசுக்கு கலால் வரி என்பது நின்று போய்விடும் . எனவே தற்போதைக்கு அரசு இந்த எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டுவராமல் தவிர்த்து இருக்கிறது என கூறியுள்ளார்.