Saturday, September 6, 2025

பாண்டியன், சோழன் உள்பட 6 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எழும்பூர் – திருச்சி ராக்போர்ட் (12654/ 12653) , எழும்பூர் – மதுரை பாண்டியன் (12638), எழும்பூர் – திருச்சி சோழன் (22675), எழும்பூர் – ராமேஸ்வரம் சேது(22661/ 22662), எழும்பூர் – ராமேஸ்வரம்(16751 / 16752) ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.

எழும்பூர் – மும்பை விரைவு ரயில், கடற்கரையில் இருந்தும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம், வரும் 10 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை இருக்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News