Saturday, September 6, 2025

ரூ.58,100 சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணித் தகவல்கள் மற்றும் காலியிட விவரம்:

  1. ஈர்ப்பு ஓட்டுநர்
  • காலியிடங்கள்: 70
  • சம்பளம்: மாதம் ரூ. 19,500 – 71,900
  • தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல். செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பணி அனுபவம்.
  • வயது வரம்பு (1.7.2025 நிலை):
    • சாதாரணம்: 18 – 32 வயது
    • பிசி, எம்பிசி: 18 – 34 வயது
    • எஸ்சி, எஸ்டி: 18 – 42 வயது
  1. பதிவறை எழுத்தர்
  • காலியிடங்கள்: 30
  • சம்பளம்: மாதம் ரூ. 15,900 – 58,500
  • தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
  • வயது வரம்பு (1.7.2025 நிலை):
    • சாதாரணம்: 18 – 32 வயது
    • பிசி, எம்பிசி: 18 – 34 வயது
    • எஸ்சி, எஸ்டி: 18 – 37 வயது
  1. அலுவலக உதவியாளர்
  • காலியிடங்கள்: 151
  • சம்பளம்: மாதம் ரூ. 15,700 – 58,100
  • தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்டல் தெரிந்திருத்தல்.
  • வயது வரம்பு (1.7.2025 நிலை):
    • சாதாரணம்: 18 – 32 வயது
    • பிசி, எம்பிசி: 18 – 34 வயது
    • எஸ்சி, எஸ்டி: 18 – 37 வயது
  1. இரவுக் காவலர்
  • காலியிடங்கள்: 83
  • சம்பளம்: மாதம் ரூ. 15,700 – 58,100
  • தகுதி: தமிழில் படித்து எழுத தெரிதல்.
  • வயது வரம்பு (1.7.2025 நிலை):
    • சாதாரணம்: 18 – 32 வயது
    • பிசி, எம்பிசி: 18 – 34 வயது
    • எஸ்சி, எஸ்டி: 18 – 37 வயது

விண்ணப்பக் கட்டணம்:

  • சாதாரணம், பிசி, எம்பிசி பிரிவினர்: ரூ. 100
  • எஸ்சி, எஸ்டி பிரிவினர்: ரூ. 50

விண்ணப்பிப்பது எப்படி?

  • https://www.tnrd.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.9.2025

மேலும் முழுமையான விவரங்களுக்கு மற்றும் பதவிப் பட்டியலுக்காக மேற்கண்ட இணையதளம் பார்வையிடவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News