வட மாநிலங்களில் பருவ மழை கொட்டி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2.5 லட்சம் பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை எதிரொலியால் செப்டம்பர் 7 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.