பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, பிளாட்ஃபார்ம் கட்டணம் 10 ரூபாயில் இருந்து ரூ.12 ஆக உயர்த்தியுள்ளது.
ஜொமாட்டோ நிறுவனம் ஒரு ஆர்டருக்கு 12 ரூபாயை பிளாட்ஃபார்ம் கட்டணமாக வசூலிக்கிறது. இது ஜிஎஸ்டி தவிர்த்த கட்டணம் ஆகும். அதேபோல, ஸ்விகி நிறுவனம் ஜிஎஸ்டியுன் சேர்த்து 14 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. பண்டிகை காலம் என்பதால் இந்த கட்டண உயர்வை ஜொமாட்டோ செய்துள்ளது.