அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், அதிநவீன மின்சார சொகுசு கார்களை பல நாடுகளில் தயாரித்து வருகிறது. தற்போது இந்திய கார் சந்தையில் ஆழமாக கால் பதிக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இதற்காக மும்பை, டெல்லியில் டெஸ்லா ஷோரூம்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 2,500-க்கும் அதிகமான கார்களை விற்பனை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்த காரணத்தால் டெஸ்லா கார்களுக்கான முன்பதிவு மந்தமாகவே உள்ளது. இதுவரை 600 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.