Tuesday, September 2, 2025

சாலையில் தேங்கிய மழைநீர் : படகில் சென்று போராட்டம் நடத்திய காங்கிரஸ்

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடந்து கனமழை பெய்து வருகிறது. ஹரியானா மாநிலத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் மழையின் பொது வெள்ளநீர் தேங்காமல் இருக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி குருகிராம் சாலையில் தேங்கிய மழைநீரில் ரப்பர் படகுடன் சென்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News