Tuesday, September 2, 2025

மூளையை உண்ணும் அமீபா : 100 பேரில் 2 பேர் தான் உயிர் பிழைக்க முடியும்..!

மூளையை உண்ணும் அமீபா என்ற நோய் கேரளாவில் பரவி வருகிறது. தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Naegleria Fowleri என அறிவியல் ரீதியாக அழைக்கப்படுகிறது. இது முதன்முதலில் 1960களில் ஆஸ் திரேலியாவில் கண்டறியப்பட்டது. இது சூடான நன்னீர் நிலைகளில், குறிப்பாக ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் மோசமாகப் பராமரிக்கப்படும் நீச்சல் குளங்களில் வாழ்கிறது.

மூளையை உண்ணும் அமீபாவின் முதன்மை அமீபிக் மெனிங்கோஎன் செபாலிடிஸ் (PAM) எனப்படும் ஒரு கடுமையான மூளைத் தொற்றை ஏற்படுத்தி மூளை திசுக்களை அழித்து மரணத்திற்கு வழிவகுக்கிறது. மூளையை உண்ணும் அமீபாவால் ஏற்படும் தொற்று மிகவும் அரிதானது என்றாலும், அதன் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது.

இந்த தொற்று பெரும்பாலும் குழந்தைகளையும் இளைஞர்களையும் பாதிக்கிறது. ஏனென்றல் அவர்கள் நீர் நிலைகளில் நீந்துவது அல்லது விளையாடுவது போன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

இதுதொடர்பாக ரேலா மருத்துவமனை துவமனை நரம்பி நரம்பியல் துறை இணை ஆலோசகர் ஸ்ரீவித்யா கூறியதாவது:

தற்போது கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா பாதிப்பு அதிகமாக உள்ளது. இது பொதுவாக வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் வாழக் கூடியவை. குளம் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் இது வாழ கூடும். சுத்தமாக இருக்கும் நீரில் இது இருக்காது.

குளிக்கும்போது மூக்கு வழியாக மூளைக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளைக்குள் நுழைந்த ஒன்று முதல் இரண்டு வாரங்களில் மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இந்த பாதிப்பு தீவிரமாக இருக்கும்.

இதைப் பற்றி விழிப்புணர்வு குறைவாக உள்ளது. எனவே மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. அது மட்டுமின்றி இதுபோன்ற நீர்களில் குளிக்காமல் இருப்பது நன்று. இந்த பாதிப்புக்கு மருத்துவம் போதுமான அளவில் இல்லை.

100 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் இரண்டு பேர் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். கிட்டத்தட்ட 98 பேர் இறந்து போகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது ஒரு அரியவகை பாதிப்பு தான். ஆனால் பாதிப்பு ஏற்பட்டால் பிழைப்பது மிகவும் கடினமாக இருக்கும். தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது ஒருவர் இடமிருந்து மற்றொருவருக்கு பரவாது. தண்ணீர் மூலமாக மட்டுமே பரவக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

அறிகுறிகள் எப்படி இருக்கும்?

மூளைக்காய்ச்சலுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகள்தான் இதற்கும் ஏற்படும்.காய்ச்சல், தலைவலி, சுயநினைவு மாறுதல், குழப்பமாக பேசுவார்கள், கழுத்து வலி, கழுத்து இறக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.

பாதுகாப்பு வழிமுறைகள் என்ன?

ஏரி, குளம், குட்டையில் தேங்கியுள்ள நீர், சுத்தம் இல்லாத பாதுகாப்பற்ற நீர்நிலை போன்றவற்றில் குளிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சூடான, தேங்கிய நன்னீர் நிலைகளில் நீந்துவதை தவிர்க்க வேண்டும்.சந்தேகத்திற்கு இடமான நீர் நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல், தலைவலி, அல்லது மனக் குழப்பம் போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவமனையை அணு வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News