Monday, December 29, 2025

மோடிக்கு திருட்டு பழக்கம் உள்ளது : மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

பீகாரில் நடைபெற்ற வாக்காளர்கள் அதிகாரம் பேரணியில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :

வாக்கு திருட்டு மூலம் மோடி பீகார் தேர்தலில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டிருக்கிறார். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோடி வாக்கு திருட்டு, பைசா திருட்டு, வங்கிகளை கொள்கை அடிப்பவர்களை பாதுகாக்கும் திருட்டு போன்ற திருட்டு பழக்கம் கொண்டவர்.

இன்னும் சில மாதங்களில் பீகாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்தில் இருக்காது. ஏழை, பெண்கள், தலித்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான அரசு அமையும் என அவர் பேசினார்.

Related News

Latest News