Monday, September 1, 2025

மூளையைத் தின்னும் அமீபா : இதுவரை 3 பேர் உயிரிழப்பு

கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளத்தில் கடந்த சில ஆண்டுகளாக மூளையைத் தின்னும் அமீபா(Naegleria fowleri) எனும் அரிய வகை தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி 3 மாத குழந்தைக்கு இந்த அமீபா பாதிப்பு இருப்பது முதலில் கண்டறியப்பட்ட நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்ததாக இன்று உயிரிழந்தது.

மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 52 வயது ராம்லா என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமரசேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி உயிரிழந்தார்.

தற்போது இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் கோழிக்கோடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News