சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மிகவும் பரபரப்பாக இயங்கும் சுங்கச்சாவடிகளில் ஒன்று ஆகும். ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும். அதேபோல் திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும். இந்த நிலையில் வருகிற 1ஆம் தேதி முதல் அதாவது நாளைமறுநாள், திங்கட்கிழமை முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அதாவது, நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் உயருகிறது.
கார்/ பயணிகள் வேன் ஒரு முறை செல்ல 105 ரூபாய்,இதுவே பழைய கட்டணம் 105 ரூபாய்.திரும்பி வருவதாக இருந்தால் 160 ரூபாய், இதற்கு முன்பு இருந்த பழைய கட்டணம் 155 ரூபாய், இதில் 5 ரூபாய் உயர்த்தியுள்ளனர்..மாதந்திர பாஸ் 3170 ரூபாய்,இதற்கு முன்பு இருந்த பழைய கட்டணம் 3100 ரூபாய் ஆகும். அதாவது 70 ரூபாய் உயர்த்தியுள்ளனர்,
லைட் கமர்சியல் வாகனங்கள், ஒருமுறை செல்ல 185 ரூபாய், இதற்கு முன்பு இருந்த பழைய கட்டணம் 185 ரூபாய் தான். திரும்பி வருவதாக இருந்தால் 275 ரூபாய், இதற்கு முன்பு இருந்த பழைய கட்டணம் 270 ரூபாய்.அதாவது பழைய கட்டணத்தை விட 5 ரூபாய் உயர்த்தியுள்ளனர். மாதந்திர பாஸ் ரூ. 5545, இதற்கு முன்பு இருந்த பழைய கட்டணம் 5420 ரூபாய் ஆகும். அதாவது பழைய கட்டணத்தை விட 125 ரூபாய் உயர்த்தியுள்ளனர்.
டிரக்/பஸ், ஒரு முறை செல்ல 370 ரூபாய், இதற்கு முன் இருந்த பழைய கட்டணம் 360 ரூபாய்.அதாவது பழைய கட்டணத்தை விட 10 ரூபாய் உயர்த்தியுள்ளனர். திரும்பி வருவதாக இருந்தால் 555 ரூபாய், இதற்கு முன் இருந்த பழைய கட்டணம் 540 ரூபாய்.பழைய கட்டணத்தை விட 15 ரூபாய் உயர்த்தியுள்ளனர்.மேலும், மாதாந்திர பாஸ் . 11085 ரூபாய்.இதற்க்கு முன் இருந்த பழைய கட்டணம் 10845 ரூபாய். அதாவது பழைய கட்டணத்தை விட 240 ரூபாய் உயர்த்தியுள்ளனர்
மல்டிபிள் ஆக்சில் வாகனங்கள் அட்டஹாவது இரண்டு ஆக்சிலுக்கு மேற்பட்டவைகள், ஒருமுறை செல்ல 595 ரூபாய். இதற்கு முன் இருந்த பழைய கட்டணம் 580 ரூபாய்.அதாவது பழைய கட்டணத்தை விட 15 ரூபாய் உயர்த்தியுள்ளனர். திரும்பி வருவதாக இருந்தால் 890 ரூபாய். இதற்கு முன் இருந்த பழைய கட்டணம் 870 ரூபாய்.பழைய கட்டணத்தை விட 20 ரூபாய் உயர்த்தியுள்ளனர். மாதாந்திர பாஸ் 17820 ரூபாய். இதற்கு பழைய கட்டணம் 17425 ரூபாய்.அதாவது பழைய கட்டணத்தை விட 395 ரூபாய் உயர்த்தியுள்ளனர்.மேலும், பள்ளி பேருந்துகளுக்கு கிடையாது. மாதாந்திர பாஸ் 1000 ரூபாய் இந்த கட்டணம் பழைய கட்டண விலையிலேயே உள்ளது என்று தெரிவித்துள்ளனர்